Categories
தேசிய செய்திகள்

OMG: மகளின் ஆசைக்காக இப்படியா செய்யணும்…. பெற்றோர் செய்த கொடூர கொலை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

பெண்ணை  கொலை செய்த 2  பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி  பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ராஜாபாரி என்ற பகுதியில்  காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய  விசாரணையில் அந்த பெண்ணை கொலை செய்தது ஒரு வயது முதிர்ந்து தம்பதி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த அந்த குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது, “இது நன்கு  திட்டமிடப்பட்ட  ஒரு படுகொலை. இந்நிலையில் பல நாட்களாக குழந்தையின்றி தவிக்கும் மகளின் கனவை  நிறைவேற்ற  அவர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அந்த பெண்ணை நேரில் சந்தித்து குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்தப் பெண் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள்  அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு குழந்தையை பறித்துள்ளனர் என கூறியுள்ளனர்.

Categories

Tech |