Categories
தேசிய செய்திகள்

OMG: மது வாங்க பணம் தர மறுத்த “பக்கத்து வீட்டு பெண் படுகொலை”…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி  பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம்  அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும்  அந்த நபர்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத்  பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை   கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |