Categories
தேசிய செய்திகள்

OMG: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  3வது அலை தொடங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது. இதனால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 50 % அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அண்மையில் அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விடுமுறை தினங்களை அறிவித்திருந்தது. தற்போது அம்மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதனை கையாள போதிய அரசு ஊழியர்கள் பணியில் இல்லாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மருத்துவ விடுப்பு விடுமுறைகளை தவிர்த்து வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |