Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

OMG: மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்ட கணவன்…. கதறி துடித்த பெண்…. பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் ஷாலினி (22). இவருக்கும் மத்தேரி கிராமத்தை சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஷாலினி தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இதனையடுத்து இரு வீட்டாரும் கடந்த 15-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஷாலினி மற்றும் குமாரவேல் ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஷாலினி திருத்தணி பேருந்து நிலையத்தில் அவரது தாயாருடன் பேருந்துக்காக காத்திருந்தபோது ஷாலினியின் கணவர் குமாரவேல் மற்றும் அவரது உறவினர் தேசப்பன்  சேர்ந்து ஷாலினியை  ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் மனைவி ஷாலினியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ஷாலினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார்  குமார வேலை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி சிறையில்  அடைத்துள்ளார். மேலும் தலைமறைவான தேசப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |