Categories
உலக செய்திகள்

OMG: மூக்கு, காது, விரல்களை நீக்கிய மனித சாத்தான்…. வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனை  போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்த நபர்  மிச்செல் ஃபாரோ டோ பிராடோ.  இவரது  உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ (பச்சை குத்தல்) ஓவியங்கள் வரையப்பட்டிருகின்றன.  60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்படி  அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மூக்கின் ஒரு பகுதி எடுக்கப்பட்டிருக்கிறது. வயிற்றுப் பகுதியிலும் சில நகங்களை செய்திருக்கிறார். ஏலியன் தோற்றத்தில் தனது கைகள் தெரியவேண்டும் என்பதற்காக விரல்களில் ஒன்றையும் அவர் நீக்கி இருக்கிறார். இந்த வினோத உருவ அமைப்புடன் காணப்படும் கூடிய அவர் சாத்தான் என அழைக்கப்படுகிறார். மேலும் கொரோனா  காலத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்ட  நிலையில் காதுகள் இருக்கும் வரை முக கவசம் அணிய வேண்டிய தேவை ஏற்படும்.

அதனால் அவற்றையும் நீக்கி விடலாம் என முடிவு செய்த மிச்செல்  தற்போது இரண்டு காதுகளையும் நீக்கி இருக்கிறார். முக கவசம் அணிய தேவை இல்லாத நிலையில், இந்த காதுகளும் தேவை இல்லை எனக் கூறி சிரிக்கிறார். இதற்காக கட்டூ  மெரினோ என்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உடல் வடிவமைப்பாளர் இந்த அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கிறார். இதுபோன்ற வித்தியாச தோற்றத்துடன் மிச்செல் வலம் வந்த போதும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் எனக்கு கூறி திகைக்க வைத்திருக்கிறார்.

Categories

Tech |