முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவருடைய பேட்டியில், அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்திதுள்ளேன். ஆனால் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது என்று கூறியுள்ளார்.
நல்லவேளை கடவுள் என்னை காப்பாற்றினார். இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்.