Categories
தேசிய செய்திகள்

OMG: மொட்டையடித்து….. கைகளை பின்னால் கட்டி ராகிங்…. வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட ராகிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப் பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாம் ஆண்டு படிக்கும 27 மருத்துவ மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்துடன் லேப் கோர்ட் மற்றும் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள்.  அந்த மாணவர்கள் அனைவரும் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டு இவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பலரும் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

ஹல்டுவானி மருத்துவ கல்லூரி சீனியர் மாணவர்கள் மீது உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்து உள்ளனர். ஆனால் அந்த கல்லூரியின் முதல்வ அருண் ஜோஷி அதனை மறைக்க முயல்கிறார். ராகிங் நடைபெற்றதாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை, எனவும் மாணவர்கள் இதுபோல மொட்டை எடுத்துக்கொள்வது வழக்கம் தான். மேலும் அதையெல்லாம் ராகிங் என்று சொல்லமுடியாது. பலரும் மிலிட்டரி பாணியில் ஓட்ட  முடிவெட்டிக் கொண்டுதான் கல்லூரிக்குள் செல்கிறார்கள். ஆகவே இது ஒரு வித்தியாசமான விஷயம் இல்லை என்கிறார் அவர். இதனை உறுதி செய்வதற்காக பத்திரிக்கை நிருபர்கள் அந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை தொடர்பு கொண்டு விஷயத்தை கேட்டு உள்ளனர்.

ஆனால் யாரும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. உண்மையில் இந்த ஹல்டுவானி மருத்துவ கல்லூரி ராகிங்கிற்கு  பெயர் போனதுதான். கடந்த 2019 ஆம் ஆண்டு பல சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதற்கு முன் 2016 ஆம் ஆண்டு சீனியர்கள் சிலர் தன்னை அடித்து உதைத்து, ஆடையை கிழித்து விட்டதாக ஒரு முதலாமாண்டு மாணவர் ஒருவர் யு.ஜி.சி.யில்  புகார் செய்தார். கல்லூரிலேயே  ஒரு ராகிங் எதிர்ப்பு பிரிவு செயல்பட்டு வந்த போதிலும் அதில் மாணவர்கள் முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |