ஸ்காட்லாந்தின் மேற்கு கரையோரம் அமைந்துள்ள பிரித்தானிய தீவான Gruinard-ல் கடந்த சனிக்கிழமை அன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீவில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பறவைகள் பதற்றத்தில் கத்தும் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் இந்த தீவில் 1942ஆம் ஆண்டில் ஒரு உயிரி ஆயுதத்தை அறிவியலாளர்கள் சோதித்துள்ளனர். இந்த Gruinard தீவில், ஆந்த்ராக்ஸ் என்னும் ஒரு பயங்கர நோய்க் கிருமியை வெடிகுண்டுகளின் நிரப்பி ஆட்டு மந்தைக் ஒன்றின் அருகே அதனை வெடிக்கச் செய்து அதனுடைய விளைவுகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அதன் பிறகு அந்த தீவு 20ஆம் நூற்றாண்டில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆந்திராக்ஸ் கிருமிகள் 1990இல் அந்த தீவில் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. திடீரென எப்படி இந்தத் தீவில் தீப்பற்றியது ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. அதேபோல் அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் அது ஆள் இல்லாத தீவு ஆகும்.