Categories
உலக செய்திகள்

OMG! மொத்த கார்பன்-டை-ஆக்சைடையும் எடுக்கப்போறேன்…. எலான் மஸ்க் புதிய பரபரப்பு….!!!!

2021-ஆம் ஆண்டின் மாபெரும் மனிதர் என்று அண்மையில் தான் டைம் பத்திரிக்கை அறிக்கை தேர்வு செய்து அவரை கௌரவப்படுத்தியது. இந்தநிலையில், இன்று அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை தனியாக எடுத்து அதை ராக்கெட்டுக்கான எரிபொருளாக மாற்றும் திட்டத்தை ஸ்பேக்எக்ஸ் மேற்கொள்ளவுள்ளள்ளது. யாருக்காவது விருப்பமிருந்தால் சேரலாம். இது செவ்வாய் கிரகத்துக்கு ரொம்ப முக்கியமானது. இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் பதிவிட்டிருந்தார்.

பின்னர், மேலோட்டமாகப் பார்த்தால் ராக்கெட்டுக்கான எரிபொருள் தயாரிப்பு என்று தான் தோன்றும். ஆனால் ஓர் அரிய திட்டத்தை சொல்லி இருக்கிறார் எலான் மஸ்க். மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்துடன்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார் எலான் மஸ்க். அந்த நிறுவனம் இன்று உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி நிறுவனமாக மாறி நிற்கிறது. நமது வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு என்று பார்த்தால் மிகவும் குறைவுதான்.

ஆனால் வாயுக்களால் நிரம்பிய வளிமண்டலத்தில் பிரதானமாக இருப்பது நைட்ரஜன் தான். கிட்டத்தட்ட 77% அளவுக்கு நைட்ரஜன் வாயு நிரம்பி உள்ளது. இதையடுத்து ஆக்சிஜன் கிட்டத்தட்ட 20% மேல் இருக்கிறது. மீதமுள்ள பிற வாயுக்கள் அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறது. அவற்றில்தான் கார்பன்-டை-ஆக்சைடு அடங்கும். ஆனால் இந்த பிற வாயுக்களில் அதிகம் இருப்பது கார்பன்-டை-ஆக்சைடு தான். மேலும் இந்த கார்பன்-டை-ஆக்சைடை தான் பிரித்து எடுத்து அதை ராக்கெட்டுக்கான எரிவாயு ஆக மாற்றும் திட்டத்தை மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இது மிகவும் முக்கியமான திட்டமாக உள்ளது. புவியில் நிலவும் மாசு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே எலான் மஸ்கின் திட்டம் வெற்றி பெற்றால், வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு அளவை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால்தான் பூமியில் எல்நினோ போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகிறது என்பது நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Categories

Tech |