தனது மகளின் விவகாரத்தால் கவலையிலிருக்கும் ரஜினி சிறிது காலம் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் இருவருமே தாங்கள் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் ரஜினி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.
அதனால் ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவருடைய அடுத்த படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்திருக்கும் ரஜினி யாரையும் மீண்டும் அழைத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதில் ஒரு சில இயக்குனர்கள் படத்தில் நடிப்பதற்காக தொடர்பு கொண்டாலும் ரஜினியிடம் பேச முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி சிறிது காலத்திற்கு நடிப்பிலிருந்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் தனது பணியைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.