கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைப்பதற்கான அறிவிப்பை நாளை ரஷியா வெளியிடுகிறது
உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது . இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியப்படைகள் சண்டையிட்டு கைப்பற்றிய வருகின்றனர். இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் ரஷியா தான் கைப்பற்றிய பகுதிகளை தன்னுடன் இணைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு உலக நாடுகள் ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை தன்னுடன் இணைப்பதற்காக நடத்தும் வாக்கெடுப்பில் ரஷியாவிற்கு ஆதரவாக தான் முடிவுகள் வெளியாகும் என குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி ஜாபோர்ஜியா, லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் வாக்கெடுப்பு தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பெரும்பாலான உக்ரைன் மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் ஜாபபோர்ஜியா பிராந்தியத்தில் 93 சதவீத மக்களும், கெர்சன் பிராந்தியத்தில் 87 சதவீத மக்களும், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான அதிகார அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் நாளை வெளியிடுகிறார்.