Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்யா வசம் அணுமின் நிலையம்…. உக்ரைனில் தீவிரமடையும் போர் பதற்றம்….!!!

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து 9-வது நாளாக ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தனது உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ளும் நிலையில், தற்போது  உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை, தன்வசம் கைப்பற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகிறார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஸாப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்களை நடத்திய வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அணுமின் நிலையம் மீது குண்டு வீச்சு நடந்ததால் கட்டிடங்கள் பற்றி எரிவதாகவும்,  கதிரியக்கம் சாதாரண நிலையிலேயே உள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அணு உலைகள் மீது தாக்குதல் நடந்ததாக எந்த தகவலும் இல்லை. நிலையில் அணு உலைகள் வெடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளது

Categories

Tech |