Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைனிய நடிகர்…. பெரும் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதனால் பலரும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாய் நாட்டை பாதுகாக்க ரஷ்யாவிற்கு எதிரான போரில் களம் இறங்கிய உக்ரைனிய நடிகர் பாஷா லீ ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். 30 வயதில் உயிர்த்தியாகம் செய்த இவருக்கு சக நடிகர்களும் ரசிகர்களும் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |