ரஷியா புதிய ராக்கெட் ஒன்றே தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் தற்போது புதிய ராக்கெட் ஒன்றை தயாரித்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த தகவலை ரஷிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.