லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
சென்னையில் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே ராட்சச தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகளை லாரி மூலம் ஏற்றி வருகின்றனர். பின்னர் அவற்றை இயந்திரங்களின் உதவியுடன் தூக்கி வைத்து காண்கீரிட் போடுகின்றனர். இந்தப் பணி நேற்று முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக பேருந்து ஒன்று வந்துள்ளது.
அப்போது அந்த பேருந்து எதிர்பாராமல் லாரியின் மீது மோதியது. இதில் ரப்ஜித் குமார், அய்யாதுரை, பூபாலன் என்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.