Categories
தேசிய செய்திகள்

OMG: லிப்டில் சிறுவனை கடித்த நாய்…. உரிமையாளர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லிப்டிலிருந்து சிறுவனை நாய் கடித்ததால் வழியால் துடித்துக் கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்டில் நாய் ஒன்றுடன் உரிமையாளர் இருக்கும்போது அதே லிப்ட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அப்போது அந்த நாய் சிறுவனை கடித்து விட நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார்.

சிறுவன் வலியால் துடித்து அலறிய போதும் அதனை கண்டு கொள்ளாமல் லிப்டிலிருந்து நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்ப பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இந்தப் பெண்ணின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |