Categories
தேசிய செய்திகள்

OMG….! “வரதட்சணைக்காக இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஹத்ராஸில், வரதட்சணைக்காக இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிந்தாகர்ஹி, ஹத்ராஸில், வரதட்சணைக்காக 20 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா மாவட்டத்தின் பர்ஹாம் காவல் நிலையப் பகுதியில் உள்ள நாக்லா வீராவைச் சேர்ந்த பயல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த அனில் குமார் சிங் (25) என்பவருடன் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி திருமணம் நடந்தது. இது பற்றி பெண்ணின் தந்தை ஹரிலால் சிங் அளித்த புகாரின்படி, திருமணத்திற்குப் பிறகு தனது மகளை அவரது கணவன் மற்றும் குடும்பத்தினர் அதிக வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அனில் குமார் சிங், மாமனார் மகேந்திர சிங், மாமியார் யசோதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |