திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரிலுள்ள ஜீவா தெரு பகுதியில் ஜெயக்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “செங்குன்றம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்நிலையில் தனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஜெயக்குமார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“செங்குன்றம்” படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஜெயக்குமார், இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.