நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ. இவர்கள் இருவரும் மற்ற சில நடிகர், நடிகைகள் நெட்பிளிக்ஸ் தொடரின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த படக்குழுவினர் 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.