சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் தீவிரம் குறையாமல் உருமாறிக்கொண்டே இருந்தது. மேலும் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பல மாகாணங்களில் டெல்டா வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, அந்த மாகாணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா முழுவதும் போய்விட்டதாக கூறிய சீனா மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.