ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 1 குழந்தை இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் சஞ்சய் சர்மா என்ற நபர் மாந்திரவாதி என தன்னை கூறி அறிமுகமாகி இருக்கிறார். இதற்கிடையில் சஞ்சய் அந்த குடும்பத்துக்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இச்செயலை வீடியோ எடுத்த சஞ்சய் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் இறங்கி இருக்கிறார். அத்துடன் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்துவைத்து மயக்க மருந்து கொடுத்து வேறு சிலருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து மயக்க மருந்து கொடுத்து அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையில் மனைவியை காணவில்லை என அப்பெண்ணின் கணவர் புகாரளித்துள்ளார். அதன்பின் கடந்த 27ஆம் தேதி அந்த பெண்ணை சஞ்சய் சர்மா காவல் நிலையத்திற்கு வெளியே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். தனக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணுக்கு மயக்க மருத்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் சர்மா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.