Categories
உலக செய்திகள்

OMG….! “வெளிநாட்டினரை பிணை கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்”…. ரஷ்யாவின் குற்றசாட்டால் பரபரப்பு…!!!

உக்ரைனில் சுமார் 7,000 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துயுள்ளனர்.  

உக்ரைனில் ரஷ்யா 17-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மரியுபோல், கார்கோவ், கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் இருந்து மாஸ்கோ வரையிலும் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாகியுள்ளது. மேலும் மனிதநேயம் அடிப்படையில் ரஷ்யாவிற்கும் அனைத்து நகரங்களில் இருந்தும் பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் சுமார் 7000 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருப்பதாகவும், அந்நாட்டு துறைமுகங்களில் 70 கப்பல்கள் சிக்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ரஷ்ய துறைமுகம் கூறியுள்ளதாவது “ரஷ்யாவிற்கு 10 பாதுகாப்பு வழித்தடங்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெறும் இரண்டு பாதைகள் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |