தேசிய புலனாய்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமிருந்து இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கணக்குகளில் நிதி பெற்று அதனை தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு மடை மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கடந்த வியாழக்கிழமை அதிரடியாக சோதனை செய்தது.
அப்போது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து தேசிய புலனாய்வு முகைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018 -ஆம் ஆண்டு பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர்கள் குறித்து அமலாக்கத்துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் வெளிநாட்டு உறுப்பினர்கள் அளிக்கும் நிதி வெளிநாடு வாழ் இந்தியர்களின் கணக்குகள் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு.
பின்னர் அமைப்பின் தலைவர்கள் மூலம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும் ஹவாலா மற்றும் வேறு சட்ட விரோத வழிகளிலும் நாட்டுக்கு நிதி கொண்டுவரப்பட்டது. மேலும் பணம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் கணக்குகள் மூலம் இந்தியாவில் உள்ள பிஎஃப்ஐ தலைவர்கள் மற்றும் இரு அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் பிஎஃப்ஐ அமைப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதியை அரசிடம் இருந்து அந்த அமைப்பு மறைந்துள்ளது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக பிஎஃப்ஐ மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள் 120 கோடிக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.