விஜய் வசந்த் புகழ்பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் வசந்த்& கோவின் நிறுவனத் தலைவர் ஆவார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.
இவரின் தந்தை எச். வசந்தகுமார், வசந்த்& கோ எனும் நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டில் துவங்கினார். தற்போது இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 71 கிளைகள் கொண்டுள்ளன. இந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. விஜய் வசந்த் தற்போது வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்பி விஜய் வசந்த் குமார் தன்னுடைய விலை உயர்ந்த 1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா காணாமல் போனதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.