பெரும் கோடீஷ்வரரான பெண் ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தை கொண்டு பிறருக்கு தொண்டு செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் செனட்டராக பணிபுரிந்து வருபவர் Kelly Loffler. இவர் அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர் ஆவார். மேலும் அவருடைய கணவரின் சொத்து மதிப்பு மட்டுமே $800 மில்லியன் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் செய்யும் வேலைக்காக கிடைக்கும் $174,000 சம்பள பணத்தை தொண்டு நிறுவனங்களுக்காக கொடுக்கிறார்.
மேலும் கடந்த இரண்டு வருடங்களில் $26,600 பணத்தை 7 கருக்கலைப்பு எதிர்ப்பு கர்ப்ப மையங்களுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். உடன்படிக்கை பராமரிப்பு தத்தெடுப்புகளுக்காக $3,800 பணத்தை வாரி வழங்கியுள்ளார். மேலும் இது போன்ற கணக்கிலடங்காத தொண்டுகளை தன்னுடைய சொந்த பணத்தை மூலம் kelly செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.