ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டங்குப்பம் பகுதியை சேர்ந்த முனியாண்டி டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் மகன் முத்து பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரின் மாமா சந்தோஷ் ஆன்லைனில் செல்போன் ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.அந்த போனை முத்து பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று மாணவன் செல்போனை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகர் என்பவருடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.
பைக்கில் சென்று கொண்டிருந்த போது முத்துவின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து பேண்ட் முழுவதும் தீ பிடித்தது.அதனால் அதிர்ச்சி அடைந்த முத்து பைக்குடன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்தார்.இதில் மாணவனுக்கு தொடையில் தீக்காயமும் பைக்கில் இருந்து விழுந்ததில் தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது. மேலும் காயம் ஏற்பட்ட மனோகரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்லைனில் செல்போன் வாங்கி நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் செல்போன் வெடித்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.