நடிகை ப்ரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.
அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டில் அப்பாஸ்-முஸ்தானின் ஐத்ராஸ் (2004) இல் மிகவும் பாராட்டும்படியான அவரது நடிப்பிற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெறும் இரண்டாவது பெண்மணியானார் . இந்நிலையில் யுனிசெஃப்ஃபின் நல்லெண்ணத்தூதராகப் பதவி வகித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பல ஆண்டுகாலமாக மழையின்றி நிலத்தடி நீர்வற்றி, குடிக்க நீரின்றி வாழ்வாரம் கேள்விக் குறியான நிலையில் வாழ்ந்து வரும் கென்ய மக்களுக்காக உதவி கேட்டு கண்ணீர் வடிக்கிறார். மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் வாடுவதாக வேதனை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.