கொரோனா இன்னும் 10 வருடங்கள் நம்மோடு தான் இருக்கும் என்று பயான்டெக் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒருபுறம் தீவிரமாக பரவி மக்களை வாட்டி வருகின்ற நிலையில், அதை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அல்லது 10 வருடங்கள் நம்மிடையே இருக்கும் என்று பயான்டெக் நிறுவன தலைவர் உகுர் ஷாஹின் அறிவித்துள்ளார்.
பயான்டெக் நிறுவனத்தின் தலைவர் உகுர் ஷாஹின் இது குறித்து கூறுகையில், “கொரோனாவின் தாக்கம் எப்போதும் நம்மோடு இருந்துகொண்டேதான் இருக்கும். இதை பழக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதால் பரவலை தடுக்க போதுமானதாக இருக்குமா? என்பது நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொறுத்துதான் இருக்கிறது. வைரஸின் வீரியம் அதிகமாக இருந்தால் மக்கள் அதிக அளவிலான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.