Categories
தேசிய செய்திகள்

OMG: “100 நாள் வேலைத் திட்டம்”…. நிதியமைச்சரின் அதிர்ச்சி தகவல்…..!!!!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய பட்ஜெட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 2022-23 நிதி ஆண்டுக்கு ரூபாய் 73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி 2021 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடவும் 25.51 சதவீதம் குறைவாகும். அப்போது ரூபாய் 98,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதலில் ரூபாய் 73,000 கோடிதான் ஒதுக்கப்பட்டது. தேவை அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த அளவு உயர்த்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகவே வேலையின்மை பிரச்சினை அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து வேறு வேலைகளுக்குச் சென்றவர்களும் மீண்டும் இந்த வேலைக்குச் செல்லத் தொடங்கினர். அதேபோன்று புதிதாகவும் நிறையப் நபர்கள் இத்திட்டத்தில் இணைந்தனர்.

இவ்வாறு வேலையின்மை பிரச்சினை இருக்கும் இந்த சூழலில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலும் பழைய பாக்கித் தொகையை வழங்குவதற்கு செலவிடப்படுவதாகவும், ஊழியர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பள பாக்கி உள்ளதாகவும் ஒரு ஆய்வு கூறியது.

Categories

Tech |