தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ் பெறுவதாக இந்திய வானிலை மையம் கூறியிருந்த நிலையில், ரெட் அலர்ட் நீடிப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தி.மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.