சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல்பெருமங்கலம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அய்யப்பன் நன்னிலம் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் ஐயப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பனுக்கு 40 ஆண்டுகள் சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் அய்யப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.