Categories
உலக செய்திகள்

OMG: 20-க்கும் மேற்பட்ட பெண்களை “துஷ்பிரயோகம் செய்த தலைமைச் செயலாளர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான், நிக்கோபார்  தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர். எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு கூட்டு வன்புணர்வு செய்வதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்தார். ஆனால் நான் அதை வாங்க மறுத்து விட்டேன். இதனைத் தொடர்ந்து இருவரும் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு இதை போல் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து வெளியே சொல்ல கூடாது என்று என்னை மிரட்டினார்கள் என அந்த புகாரி கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நரேன் எப். ஐ.ஆர்-யில்   கொடுக்கப்பட்ட இரண்டு தேதியில்  ஒன்றில் தான் போர்ட் பிளேயரில்  இருப்பதாக கூறி, புது டெல்லியில் தான் இருந்ததை நிரூபிக்க விமான பயண சீட்டுகள் மற்றும் சந்தித்தவர்கள் பட்டியல் ஆகியவற்றை  காட்டியுள்ளார். முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அதிகாரிகளும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர் இருவரின் செல்போன்களில் உள்ள உரையாடல் பதிவுகள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட நரேன்  நவம்பர் 14-ஆம் தேதி வரை இடைக்காலப் பிணை பெற்றார். ஆனால் அவரது பிணையை  ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |