மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை துனிஷா சர்மா (20). இவர் அலிபாபா என்ற சீரியலின் மூலம் பிரபலமான நிலையில் instagram-ல் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நடிகை துனிஷாவை பின் தொடர்கிறார்கள். இன்று படப்பிடிப்புக்கு சென்ற துனிஷா தான் மேக்கப் போடும் புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மேக்கப் அறைக்குள் சென்ற நடிகை துனிஷா நீண்ட நேரம் வெளியே வராததால் பட குழுவினர் சந்தேகம் அடைந்து மேக்கப் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது நடிகை துனிஷா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.