விருதுநகர் மாவட்டதில் 11 வயது சிறுமி வாளை கிழி ஆசனத்தை அந்தரத்தில் தொங்கியபடி செய்து உலக சாதனை படைத்தது உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையாச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியினர். இவர்களுடைய மகள் முஜிதா(11) கடந்த ஐந்து வருடங்களாக யோகா கற்றுக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் இந்த சிறுமி கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி 8 நிமிடம் 25 மீட்டர் உயரத்தில் வளையத்தின் மேல் உடம்பை வில்லாய் வளைத்து வாளை கிழி ஆசனத்தை செய்து அசத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார். இந்த நிலையில் முஜிதாவிற்கு உலக சாதனை சான்றிதழை நோபல் புக் ஆப் மேற் பார்வையாளர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அச்சிறுமீக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.