Categories
தேசிய செய்திகள்

OMG: 36 வருடங்கள் கை கால்களில் விலங்கு, இருட்டு அறை… வீட்டில் சிறை வைத்த தந்தை… ஏன் தெரியுமா…?

36 வருடங்களாக தந்தை வீட்டில் இருட்டு அறையில் சிறை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரீஸ் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 53 வயதில் ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் இருக்கின்றார். மனநலம் குன்றிய குழந்தையாக பிறந்த ஸ்வப்னாவை அவரது தந்தை 17 வயது முதல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியது கிடையாது. மேலும் அந்தப் பெண்ணின் 17 வயதில் வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் கை மற்றும் கால்களில் விலங்குகள் போட்டு அடைத்து வைத்திருக்கின்றார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 36 வருடங்கள் சூரிய ஒளி கூட வராத இருட்டு அறையில் சொப்னா நரக வாழ்க்கையை அனுபவித்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில் இத்தனை வருடங்களாக சொப்னாவுக்கு உணவை ஜன்னல் வழியாக மட்டும் தந்து அறையை விட்டு வெளியே விடாமல் அடைத்து வைத்திருக்கின்றனர் அவரது குடும்பத்தினர். இதற்கிடையே சொப்னாவின் தந்தை கிரிஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் துயரக் கதை அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேவா பாரதிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அவர் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ அஞ்சலா மாகவூர் என்பவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் அதன் பின் எம்எல்ஏவின் முயற்சியால் வீட்டிற்கு சென்று சொப்னாவை 36 வருடங்கள் கழித்து வீட்டு சிறையிலிருந்து மீட் இருக்கின்றனர்.  கந்தல் துணியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த சொப்னாவை சுத்தம் செய்த சமூக ஆர்வலர்கள் தற்போது அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். இதனை அடுத்து இனிவரும் காலகட்டங்களில் இவர்களே பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |