Categories
தேசிய செய்திகள்

OMG: 4 வயது சிறுவனின் காலை அடுப்பில் வைத்து எரித்த தாய்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

4 வயது சிறுவனின் காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலக்காடு அட்டப்பாடியில் 4 வயது பழங்குடியின சிறுவனை தாய் ரஞ்சனி, அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதோடு பின், காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்தனர். இதில் உன்னிகிருஷ்ணன் மின் வயரால் சிறுவனை அடித்து காயப்படுத்தியதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன் கொட்டத்தாரா பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாய் ரஞ்சினி மற்றும் அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனை கைது செய்தனர். அதாவது தாக்குதலுக்கு ஆளான சிறுவனின் தந்தை அளித்த புகாரின்படி குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் சிறுவனை தொடர்ந்து துன்புறுத்தியதை அடுத்து ரஞ்சனியின் தகப்பனார் சிறுவனை மீட்டு பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தந்தையிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

Categories

Tech |