உலக நாடுகளில் கொரோன அதிவேகமாக பரவி வருவதால் பெரும்பாலான நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் 616 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்பையே இழந்துள்ளனர்.
இவை மாணவர்களின் மன நலத்தை பாதிப்பதோடு, அவர்களை தவறாக பயன்படுத்தக் கூடிய அபாய தீர்க்கும் வழி வகுக்கிறது. மேலும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து கிடைப்பதை கூட இது தடுக்கிறது. குழந்தைகளின் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத இழப்பை உலகம் சந்தித்து வருகிறது என யூனிசெப் அறிவித்துள்ளது.