வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று 3-வது மூறையாக நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி மீ கனமழை பதிவானதாக தெரிவித்துள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையின் அளவு அதிகரிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.