மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ஒரு அமெரிக்க ஆப்ரிக்க பாப் இசை பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். `1982-இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை படைத்தார். 1980-களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். இந்நிலையில் இவர் மும்பையில் 1996 இல் ஒரு நடன நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார். அந்த நடன நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு ரூ.8 கோடி வரை வசூலாகிறது. அந்த 8 கோடி ரூபாயையும் இந்தியாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைக்கேல் ஜாக்சன் வழங்கிவிட்டாராம்.