Categories
தேசிய செய்திகள்

OMG: 8 வயது சிறுவனுக்கு மாரடைப்பு…. ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த சோகம்…. பதறிப்போன பெற்றோர்…!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் என்ற மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு கடந்த நான்காம் தேதி நடந்த விபத்தில் வலது கை உடைந்து உள்ளது. அதனால் சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது சிறுவனுக்கு சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

ஆனால் சில வினாடிகளில் சிறுவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் காலை 10 மணி அளவில் உயிரிழந்த நிலையில் பெற்றோருக்கு பிற்பகல் ஒரு மணிக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எட்டு வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |