உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரோஷ்னி கியாசுதீன் அன்சாரி(9). இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மும்பை, சியோன் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்துள்ளனர். அங்கு சோனோகிராபி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறுமியின் வயிற்றை சோதனையிட்டபோது அவரது வயிற்றில் உயிரற்ற நிலையில் சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி பிறந்தது முதலே அவரது வயிற்றில் அச்சிசு இருந்ததாகவும், இரண்டு கருக்கள் உருவாகும் தருணங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் ரோஷ்னியின் வயிற்றில் இருந்து இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.