ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்களுடைய 3 வயது மகளுடன் கவுரா தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் குமார் காரை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பிரகாஷ் குமாரிடம் வழிபறியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாகுமாரி தன்னுடைய கணவரை மீட்பதற்காக காரில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது மர்ம நபர்களில் ஒருவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை ரியா குமாரியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து பிரகாஷ்குமார் தன்னுடைய காரில் மனைவியை ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரம் வரை தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியைச் சில உள்ளூர் வாசிகள் ரியா குமாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு உதவி செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் ரியாகுமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரகாஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.