பிக்பாஸ் பிரபலம் ரைசா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல திரைப்பிரபலங்கள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்ட ரைசாவும் மிகவும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில், ரைசா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதனுடன் ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “Facial Treatmentகாக சென்று இருந்தேன், அங்கே நான் வேண்டாம் என்று கூறியும், அவர் எனக்கு புதிதான விஷயத்தை என் முகத்தில் Facial செய்தார். அதன் விளைவு என் முகத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவருடைய தொழிலாளர்களிடம் கேட்டாலும், அவர் ஊருக்கு வெளியில் இருக்கிறார் என்று கூறினர்” என்று பதிவிட்டுள்ளார்.