Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG! Credit, Debit card யூஸ் பண்றீங்களா… அதிர்ச்சி செய்தி… முக்கிய விவரங்கள் திருட்டு…!!!

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களின் மிக முக்கிய விபரங்கள் தளத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டியபோது செலவு செய்யும் பணம் அதன் பிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தும் சுமார் 10 கோடி பயனர்களின் மிக முக்கிய விபரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியாகி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பரிமாற்றங்களின் போது இந்த விவரங்கள் வெளியாகி இருக்கலாம். இதில் பல்வேறு இந்தியர்களின் கஸ்டமர் ஐடி மற்றும் கார்டு எண் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பயனர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |