இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கிருந்த யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட ஒரு வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் எப்படி யானை சிலைக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டார் என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இருப்பினும் யானை சிலைக்கு அடியில் மாட்டிக் கொண்ட நபரை கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
அதோடு பலவிதமான அறிவுரைகளையும் அவருக்கு கூறுகிறார்கள். இருப்பினும் அந்த நபரால் யானை சிலைக்கு அடியில் இருந்து வெளியே வர முடியவில்லை. அ ந்த நபர் கடைசியில் சிலைக்கு அடியில் இருந்து வந்தாரா என்பதும் தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலரும் பல விதமான கமெண்ட்ஸ்களை செய்து வரும் நிலையில் சிலர் இது போலியான வீடியோ என்றும் கூறுகிறார்கள். மேலும் சிலர் இது போன்றது ஆபத்தான வழிபாடு என்றும் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்றும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
Any kind of excessive bhakti is injurious to health 😮 pic.twitter.com/mqQ7IQwcij
— ηᎥ†Ꭵղ (@nkk_123) December 4, 2022