Categories
பல்சுவை

OMG: முதலைப் போல் வேடமணிந்து உண்மையான முதலையை சீண்டிய நபர்…. வைரலாகும் திகில் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வருகிறது. அந்த வகையில் தற்போது முதலை போன்று உடையணிந்த ஒருவர் உண்மையான முதலையின் கால்களை பிடித்து இழுக்கும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக ‌முதலைகள் ஊர்வன வகையை சேர்ந்ததோடு நீரில் வசிக்கும் தன்மை கொண்டவை. இந்நிலையில் நீர் நிலைக்கு அருகில் படித்துக் கொண்டிருந்த ஒரு முதலையின் பக்கத்தில் முதலை போன்று வேடமணிந்த ஒருவர் மெதுவாக ஊர்ந்து சென்று அதன் கால்களை பிடித்து இழுக்கிறார்.

அந்த முதலை அசதியில் இருந்ததோ என்னவோ தெரியவில்லை தன்னுடைய கால்களை மெதுவாக விலக்கிவிட்டு எதுவுமே செய்யாமல் அமைதியாக படுத்திருந்தது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் முதலைகளால் மனிதர்களுக்கு ஆபத்து வராது என்ற போதிலும் சில சமயங்களில் மனிதர்களை முதலைகள் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

Categories

Tech |