Categories
இந்திய சினிமா சினிமா

OMG!… அவதார் 2 படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் உற்சாகத்தில் திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் 2 படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லட்சுமி ரெட்டி ஸ்ரீனு பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருக்கு அதிக மகிழ்ச்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதேபோன்ற ஒரு சம்பவம் அவதார் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது தைவான் நாட்டில் நடந்தது. அதன் பிறகு ஹாலிவுட் ஹாரர் படமான அனாபெல்லே கம்ஸ் ஹோம் என்ற படத்தை பார்த்தபோது 77 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் என்ற படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தியேட்டரிலேயே உயிரிழந்தார். மேலும் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் பலர் மகிழ்ச்சி மற்றும் பயத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்

Categories

Tech |