கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளுக்கு இனி வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ரூல்ஸ் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தின் போது நிதி சம்பந்தமான விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். வங்கி தரப்பிலிருந்து செய்யப்படும் சில மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில சமயங்களில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த முறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் கொண்டு பரிவர்த்தனை செய்யும் பொழுது இனி 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும், அதுமட்டுமில்லாமல் அதனுடன் சேர்த்து ஒரு சிறிய தொகையை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சில்லறை விற்பனை மையம், கடைகள், ஆன்லைன், ஷாப்பிங் என எங்கு பரிவர்த்தனை செய்தாலும் இந்த கட்டணம் வசூல் செய்யப்படும். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருள் வாங்கினாலும் இதே விதிமுறை பின்பற்றப்படும்.
இந்தியாவில் தற்போது buy now pay later என்ற நடைமுறை பிரபலமாகி வருகின்றது. பொருட்களை முன்கூட்டியே வாங்கி விட்டு அதற்கான பணத்தை தவணை அதாவது ஈஎம்ஐ முறையில் பின்னர் செலுத்தி கொள்ள முடியும். ஒரே தடவையில் பெரிய தொகையை செலவு செய்ததை விட ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை செலுத்துவது என்பது ஏதுவாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இதுபோன்று ஒரு முடிவு எதிர்மறையாக எதிர்பார்க்கப்படுகின்றது .