தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியது சூப்பர் ஹிட் ஆனது. இதனால் சமந்தாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் மற்றும் குஷி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு அரிய வகை சரும அலர்ஜி நோய் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் மருத்துவமனையில் இருந்து டப்பிங் செய்யும் புகைப்படம் வெளியாகியது. இதை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சமந்தா 12 வருடங்களில் சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து வைத்துள்ளாராம். மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக நடிகை சமந்தா 4 கோடி ரூபாய் வரை வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.