கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பிரபலமான மேகா கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த போது திடீரென பாலம் சரிந்து இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 8 தொழிலாளிகள் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக காயத்தோடு உயிர்த்தப்பினர்.
இதனையடுத்து பாலத்தை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மக்கள் கூட்டம் கூடியதால் பாலத்தை சரி செய்யக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினர். மேலும் பாலம் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.